யாழ் போதனா வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கி உதவிய கனடா இலங்கை நட்புறவு மன்றம்
#Jaffna
#Canada
#Hospital
#Surgery
Prasu
5 months ago

யாழ் போதனா வைத்திய சாலையின் கண் சத்திர சிகிச்சை பிரிவு இலங்கையில் அதிகளவான கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளுகின்ற நிலையம் ஆகும்.
இவ்வருடம் 7500 மேற்பட்டவர்களுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. யாழ் போதனா வைத்தியசாலை கண் சத்திர சிகிச்சை விடுதிக்கு தேவையான விஷேட உபகரணங்கள் சில கனடா இலங்கை நட்புறவு மன்றத்தின் ஊடாக கடந்த வாரம் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் சில உபகரணங்கள் திரு. சர்வேஸ்வரன்( Assist RR அமைப்பின் தலைவர்) அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.



