மகர ராசியினருக்கு நிதி நிலை உயரும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 hours ago
மகர ராசியினருக்கு நிதி நிலை உயரும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நினைப்பது நிறைவேறும் நாள். இன்று மாலை வரை நீங்கள் ஈடுபடும் செயல்களில் வெற்றி உண்டாகும்.பரணி: ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். உறவினர் உதவியுடன் வேலை நடக்கும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.கார்த்திகை 1: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். தம்பதிக்குள் உற்சாகம் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். உடல்நிலை சீராகும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.ரோகிணி: போட்டியாளர்கள் உங்கள் பாதையிலிருந்து விலகுவர். வரவேண்டிய பணம் வரும். உழைப்பாளர் நிலை உயரும்.மிருகசீரிடம் 1,2: தொழிலில் உண்டான தடை விலகி முன்னேற்றம் அடையும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். ஒரு சிலர் குழந்தைகளுடன் பயணம் மேற்கொள்வீர். மனக்குழப்பம் விலகும்.திருவாதிரை: வியாபாரத்தில் வேலை ஆட்களை மாற்றுவீர். புதிய வாடிக்கையாளர் வருவர். லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.புனர்பூசம் 1,2,3: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்வீர். எதிர் பார்ப்பு பூர்த்தியாகும்.

கடகம்

புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும். குடும்பத்தினரால் சில சங்கடம் உருவாகும்.பூசம்: வியாபாரத்தில் முழுமையான கவனம் செலுத்துவதால் எண்ணம் நிறைவேறும். பொருளாதார நெருக்கடி விலகும்.ஆயில்யம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். உழைப்பாளர்கள் போராடி வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்

மகம்: நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். வியாபாரம் விருத்தியாகும். வரவு அதிகரிக்கும்.பூரம்: குடும்பத்திற்கான நெருக்கடி விலகும். சகோதரர் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள்.உத்திரம் 1: எதிர்பார்த்த தகவல் வரும். உறவினர் ஆதரவுக் கரம் நீட்டுவர். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் ஈடுபடும் செயல் லாபமாகும். பணவரவு திருப்தி தரும்.அஸ்தம்: குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். கண் சிகிச்சைக்காக ஒரு சிலர் மருத்துவரை சந்திப்பீர்.சித்திரை 1,2: போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.

துலாம்

சித்திரை 3,4: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை பேசித் தீர்வு காண்பீர். எதிர்பார்த்த வரவு வரும். குடும்ப நெருக்கடி விலகும்.சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். மனக்குழப்பம் விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: திட்டமிட்டு செயல்படும் வேலை லாபமாகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: ஒரு சிலர் கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர். மனம் தெளிவடையும். செலவிற்கேற்ற வரவு வரும்.அனுஷம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நெருக்கடி நீங்கும்.கேட்டை: எதிர்பாராத செலவுகளை சமாளிப்பீர். நீங்கள் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

தனுசு

மூலம்: முன்னேற்றமான நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் அதிகரிக்கும். உங்கள் நிலை உயரும். எதிர்பார்த்த தகவல் வரும்.பூராடம்: கோயில் தரிசனம், உறவினர் வீடு, பொது நிகழ்ச்சி என்று இன்றைய நாளை கழிப்பீர்கள். ஒரு சிலர் நற்செயல்களில் ஈடுபடுவீர்கள்.உத்திராடம் 1: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். நண்பர்கள் நல்ல வழி காட்டுவார்கள். தொழிலில் வரவேண்டிய பணம் வரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலை உயரும்.திருவோணம்: மற்றவர்கள் கூறும் குறைகளை காதில் வாங்காமல் செயல்படுவீர். ஒரு சிலர் உறவினர்கள் ஊருக்கு சென்று வருவீர்.அவிட்டம் 1,2: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர். எதிர்பார்த்த அளவிற்கு பணியாளர் ஒத்துழைப்பு உண்டாகும். விருப்பம் நிறைவேறும்.

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபார போட்டியாளர்கள் விலகிச் செல்வர். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். வருமானம் திருப்தி தரும்.சதயம்: நண்பர் ஒத்துழைப்புடன் ஒரு முயற்சியை மேற்கொண்டு லாபம் காண்பீர். எண்ணம் பூர்த்தியாகும்.பூரட்டாதி 1,2,3: செயல்களில் மற்றவர் குறுக்கீடு இருந்தாலும் அவற்றை முறியடித்து நினைத்ததை சாதிப்பீர். வேலை எளிதாக முடியும்.

மீனம்

பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் எதிர்பாராத தடை தோன்றும். அலுவலகப் பணியில் சிறு சங்கடம் தோன்றும்.உத்திரட்டாதி: வழக்கமான வேலைகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்றப் பிரச்னை உங்களைத் தேடி வரும்.ரேவதி: இனம் புரியாத குழப்பம் இருக்கும். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!