கனடா-மொன்றியலில் இடம்பெற்ற தீ விபத்தில் தாய் மற்றும் மகள் மரணம்

#Death #Canada #Accident #fire
Prasu
5 months ago
கனடா-மொன்றியலில் இடம்பெற்ற தீ விபத்தில் தாய் மற்றும் மகள் மரணம்

கனடாவின் மொன்றியாலில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவத்தில் தாய் ஒருவரும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸைச் சேர்ந்த பெண்ணும் அவரது ஏழு வயது மகளும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பில் மொன்றியால் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 43 வயதான லெனோர் கிராயாடி மற்றும் பரன் டிரைன் கிராயாடி ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்ற போது கட்டிடத்தில் சுமார் 23 பேர் இருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

 தீ விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கட்டடம் 1923 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!