உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்

#France #Weapons #President
Prasu
1 month ago
உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்

இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை உலக நாடுகள் நிறுத்த வேண்டும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

காஸாவில் இடம்பெற்று வரும் தாக்குதலில் இஸ்ரேல் மிக மோசமான ஆயுதங்களை பயன்படுத்தி வருகிறது. இவ்வகை ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என உலகநாடுகளிடம் ஜனாதிபதி மக்ரோன் கோரியுள்ளார். ‘இன்று இஸ்ரேலுக்கு பிரதான ஆயுத விநியோகத்தை அமெரிக்கா மேற்கொள்கிறது. 

2019 தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையான வருடங்களில் 69% சதவீதமான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. கனடா, ஸ்பெயின், நெதர்லாந்து போன்ற நாடுகளும் ஆயுதங்கள் வழங்கியிருந்தன.

பிரான்ஸ் ஒரு சில ஆயுங்களை வழங்கியிருந்தது. ஆனால் அது இஸ்ரேலின் எல்லைகளை பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட ஆயுதங்களே தவிர, கொடிய மோசமான ஆயுங்கள் இல்லை எனவும் மக்ரோன் தெரிவித்தார்.

“லெபனான் மற்றுமொரு காஸாவாக மாறுவதை தடுக்கவேண்டும்!” எனவும் தெரிவித்தார். ”சென்றவருடம் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை நாம் கடுமையாக கண்டிக்கிறோம். 

இஸ்ரேலுக்கு அதனை தடுத்து தனது எல்லையையும் மக்களையும் பாதுகாக்கும் உரிமை உண்டு. ஆனால் சர்வதேச போர் விதிமுறைகளை மீறி.. காஸாவினை அழித்ததோடு, லெபனானை தாக்குவதையும் விரும்பவில்லை. பொதுமக்களை பலிகொடுத்து நாங்கள் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடக்கூடாது!” எனவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!