காசாவில் பொது இடங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல் - 26 பேர் பலி

#Death #Attack #Israel #Gaza
Prasu
1 month ago
காசாவில் பொது இடங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல் - 26 பேர் பலி

சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையும் மீறி பாலஸ்தீனம் லெபனான் மீது இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. 

பாலஸ்தீனத்தில் இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். 

இந்நிலையில் தற்போது லெபனான் மீது குறிவைத்து இஸ்ரேல் தாக்கி வந்தாலும், காசா மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தி உள்ளது.

மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் அல்-பலாஹ் நகரில் அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு அருகே இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த மசூதி மற்றும் பள்ளியை குறிவைத்து இஸ்ரேல் குண்டுகளை வீசியது.

 இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் 93 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கிடையே வடக்கு காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தப்பட்டுள்ள இஸ்ரேல் அங்குள்ள மக்களை வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!