இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை
இலங்கையில் பல வருடங்களாக சிறைவைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கைதிகள் 56 பேர் வாடகை விமானம் மூலம் அந்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
முதலீட்டு வாரியம், தகவல் தொடர்பு மற்றும் தனியார்மயமாக்கலுக்கான மத்திய அமைச்சர் அப்துல் அலீம் கான் தனிப்பட்ட முறையில் அவர்களின் பயண செலவுகளை ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கைதிகள் திரும்புவதற்கு வசதியாக அப்துல் அலீம் கானின் தாராள ஆதரவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி நன்றி தெரிவித்தார்.
இந்த செயல்முறை முழுவதும் ஒத்துழைத்த இலங்கை அரசாங்கத்திற்கும் உயர்ஸ்தானிகருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இந்த பாகிஸ்தானிய பிரஜைகள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்வதற்காக, அமைச்சர் நக்வியின் அறிவுறுத்தலின்படி, உள்துறை அமைச்சகம் கடந்த மூன்று மாதங்களாக இலங்கை அதிகாரிகளுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது