சிம்ம ராசியினருக்கு செயல்களில் தடை தோன்றும் நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
சிம்ம ராசியினருக்கு செயல்களில் தடை தோன்றும் நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.பரணி: புதிய முயற்சி இன்று வேண்டாம். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனமுடன் செயல்படுவது அவசியம்.கார்த்திகை 1: பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நினைத்ததை நடத்தி முடிப்பீர். நண்பர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவர்.ரோகிணி: உற்சாகத்துடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.மிருகசீரிடம் 1,2: கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி குறையும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். 

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: தடைபட்டிருந்த வேலை நடக்கும். உடல் நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். செயல்களில் உற்சாகம் இருக்கும்.திருவாதிரை: தொழிலில் தோன்றிய சங்கடம் தீர்வு காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வழக்கு வெற்றியாகும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நினைத்ததை சாதிப்பீர். 

கடகம்

புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பூசம்: மனக் குழப்பம் நீங்கும். உறவினர்கள் ஆதரவால் வேலை நடக்கும். உழைப்போர் நிலை உயரும்.ஆயில்யம்: செயல்களில் லாபம் உண்டாகும். திட்டமிட்ட வேலை நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும். 

சிம்மம்

மகம்: உங்கள் செயல்களில் தடை தோன்றும் நாள். எதிர்பார்ப்பு இன்று தள்ளிப்போகும். திட்டமிட்ட முயற்சி இழுபறியாகும். பூரம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். மேலதிகாரிகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். சிறு வியாபாரிகள் கவனமாக செயல்படுவது அவசியம்.உத்திரம் 1: வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சியில் சில தடை தோன்றும். கடன் கொடுத்தவர்களால் நெருக்கடி உண்டாகும். 

கன்னி

உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும்.அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதீப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.சித்திரை 1,2: பணிபுரியும் இடத்தில் பொறுப்பு கூடும். பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நினைத்த வேலையை நடத்துவீர்கள். 

துலாம்

சித்திரை 3,4: வருமானத்தில் இருந்த தடை அகலும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். வருமானம் உயரும்.சுவாதி: நேற்று எதிர்பார்த்த தகவல் இன்று வரும். உங்கள் முயற்சி லாபமாகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். 

விருச்சிகம்:

விசாகம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். அலைச்சல் உண்டானாலும் செயலில் லாபம் காண்பீர். குடும்பத்தினர் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது.அனுஷம்: மனக்குழப்பம் விலகி தெளிவுண்டாகும். உங்கள் தொழில் குறித்த ரகசியங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்.கேட்டை: நினைத்த வேலையை நடத்தி முடிப்பீர். நீண்டநாள் கனவு நனவாகும். அலுவலகப் பணியில் இருந்த நெருக்கடி நீங்கும். 

தனுசு

மூலம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்பூராடம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.உத்திராடம் 1: வரவை விட செலவு அதிகரிக்கும். காணாமல் போன பொருள் கையில் கிடைக்கும். உழைப்பினால் விருப்பம் பூர்த்தியாகும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: நீங்கள் மேற்கொள்ளும் செயலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.திருவோணம்: நண்பர்களால் ஏற்படும் உதவி நன்மை தரும். வராமல் இருந்த பணம் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அவிட்டம் 1,2: உங்கள் செல்வாக்கு உயரும். உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்வீர். நவீன பொருள் வாங்குவீர். 

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும்.சதயம்: எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் வேலை லாபத்தில் முடியும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். சிறு வியாபாரி நன்மை அடைவர்.பூரட்டாதி 1,2,3: மனக்குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். 

மீனம்

பூரட்டாதி 4: நினைத்ததை சாதித்து முடிக்கும் நாள். எதிர்பார்த்த தகவல் வரும். கொடுக்கல் வாங்கலில் லாபம் உண்டாகும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பெரிய மனிதர்கள் உதவியால் முயற்சி வெற்றியாகும். உடன் பணிபுரிபவர்கள் உதவி புரிவர்.ரேவதி: மனக்குழப்பம் நீங்கும். உத்தியோகத்தில் உண்டான நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். தெய்வ சிந்தனை பாதுகாக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!