காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் : பல பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு!
#SriLanka
#weather
Dhushanthini K
1 month ago
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, வெப்பமண்டல குவிப்பு மண்டலம் (வடக்கு அரைக்கோளம் மற்றும் தெற்கு அரைக்கோளத்தில் இருந்து வரும் காற்று சங்கமிக்கும் மண்டலம்) தீவின் காலநிலையை பாதிக்கிறது.
அதன்படி, மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் அதிகபட்சமாக 100 மில்லி மீற்றருக்கு மேல் இருக்கலாம். மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் மக்களை கோருகிறது.