பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமனம்!
பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போதுள்ள சட்டத்தின்படி, ஒரு செயல் காவல்துறை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு 14 நாட்களுக்கு மேல் இருந்தால், அதற்கு அரசியலமைப்புச் சபையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி நியமிக்கப்பட்டார். அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
158 வருட பொலிஸ் வரலாற்றில் பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவையில் இணைந்து பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட ஒரே அதிகாரி பிரியந்த வீரசூரிய மாத்திரமே ஆவார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டதாரியான இவர், இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தரணியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராகப் பதவி உயர்வு பெற்றார்.