அதானியின் திட்டங்கள் இடைநிறுத்தப்படுமா : புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
இலங்கையின் புதிய அரசாங்கம், அதானி குழுமத்துடனான காற்றாலை மின்சக்தி ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யப்போவதாகக் கூறியுள்ளது.
இது வெளிநாடுகளில் விரிவாக்க முயலும் இந்திய கூட்டுக்கு புதிய தடையாக உள்ளது. அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் திட்டங்களுக்கு முந்தைய நிர்வாகம் மின்சார விலைக்கு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த விடயம் முக்கிய பங்கை வகிக்கிறது. இதற்கமைய புதிய அரசாங்கத்தின் ஆட்சி மாற்றம் இந்த விடயத்தில் தாக்கம் செலுத்துகிறது.
திஸாநாயக்க இந்தத் திட்டத்தை இலங்கையின் எரிசக்தி இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகக் கூறியதுடன், அதை ரத்து செய்வதாகவும் உறுதியளித்தார்.
எவ்வாறாயினும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் முக்கிய திட்டங்கள் தொடர்பில் கொள்கை முடிவுகள் எதுவும் எடுக்கப்பட மாட்டாது என விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.