சட்டத்திற்கு எதிரான மதுக்கடை அனுமதி வழங்கிய ஆணையர் குணசிறி பணிநீக்கம்
கலால் ஆணையர் ஜெனரல் எம்.ஜே. திரு.குணசிறியின் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இது தொடர்பான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதுடன் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சட்டத்திற்கு முரணாக மதுக்கடை அனுமதி வழங்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாக கலால் ஆணையாளர் எம்.ஜே.குணசிறி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கலால் ஆணையாளர் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி, கிஹான் சவீந்திர பெர்னாண்டோவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு முன்னர் கலால் ஆணையாளர் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வரும் நிலையில், அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.