மீன ராசியினருக்கு கடவுள் வழிபாட்டால் எண்ணியது நடந்தேறும் நாள் - ராசிபலன்
மேஷம்:
அசுவினி: நன்மையான நாள். மற்றவரால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்.பரணி: பெரியோர் ஆதரவால் வேலையில் வெற்றி காண்பீர். எந்தவொரு செயலிலும் உங்களுடைய நேரடிப் பார்வை அவசியம்.கார்த்திகை 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். வருவாய் உயரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பழைய பிரச்னை மீண்டும் தலையெடுக்கும். உங்கள் வேலையில் குழப்பம் உண்டாகும்.ரோகிணி: பூமி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நிதானம் அவசியம். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.மிருகசீரிடம் 1,2: வேலைபளு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பிரச்னைகளை சந்திப்பீர். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: நினைத்ததை சாதித்து முடிப்பீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.திருவாதிரை: வியாபாரத்தில் போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். புதிய வாடிக்கையாளரால் வருவாய் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: இழுபறியாக இருந்த பிரச்னையில் வெற்றி உண்டாகும். கூட்டுத் தொழிலில் இருந்த சிக்கல் விலகும்.
கடகம்:
புனர்பூசம் 4: வியாபாரம் விருத்தியாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச்செல்வர். லாபம் அதிகரிக்கும்.பூசம்: கவனமுடன் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைப்பதை நடத்தி முடிப்பீர்.ஆயில்யம்: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.
சிம்மம்:
மகம்: உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும்.பூரம்: மனக்குழப்பம் விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செயல்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.உத்திரம் 1: உங்கள் நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். நிதி நிலை உயரும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்திற்காக சேமிப்பை ஏற்படுத்துவீர். ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர்.அஸ்தம்: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் லாபம் உண்டாகும். கடன்களை அடைப்பீர். அரசு வழி முயற்சியில் தடை விலகும்.சித்திரை 1,2: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நேற்றைய விருப்பம் நிறைவேறும்.
துலாம்:
சித்திரை 3,4: உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். வெளியூர் பயணத்தில் லாபம் உண்டாகும்.சுவாதி: உடல்நிலை சீராகும். கவனமாக செயல்பட்டு,வேலைகளை முடிப்பீர். எதிர்ப்புகள் விலகும்.விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். சிறு வியாபாரிகள் முயற்சி வெற்றியாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.
விருச்சிகம்:
விசாகம் 4: வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர். முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: சொத்து வழியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள்.கேட்டை: வியாபாரத்தை விரிவு செய்வதில் கவனம் தேவை. செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
தனுசு:
மூலம்: இழுபறியாக இருந்த வேலை ஒன்றை இன்று நிறைவேறும். வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர்.பூராடம்: ஒரு சிலர் குழப்பத்திற்கு ஆளாவீர். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் படித்துப் பார்ப்பது நல்லது.உத்திராடம் 1: வருமானத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் விருப்பம் பூர்த்தியாகும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: தடைப்பட்ட வேலை நடக்கும். திறமை பளிச்சிடும். காணாமல் போன பொருள் கைக்கு கிடைக்கும்.திருவோணம்: உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். அலைச்சலால் சோர்வு அடைவீர்அவிட்டம் 1,2: உழைப்பு அதிகரிக்கும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. செலவிற்கேற்ற வரவு வரும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். நிதிநிலை உயரும்.சதயம்: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வருமானம் அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: முயற்சியில் இருந்த தடை விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் நீங்கும். வரவேண்டிய பணம் வரும். செல்வாக்கு உயரும்.
மீனம்:
பூரட்டாதி 4: கடவுள் வழிபாட்டால் எண்ணியது நடந்தேறும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மேலதிகாரி ஆதரவால் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த தகவல் வரும்.ரேவதி: உங்கள் செயல்பட்டிற்கு உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக நடந்து கொள்வர். ஒரு சிலருக்கு புதிய பணி காத்திருக்கும் நாள்.