வருமானத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் அநுர குமார திஸாநாயக்க!

#SriLanka #AnuraKumara
Dhushanthini K
1 month ago
வருமானத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் அநுர குமார திஸாநாயக்க!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கவனமானது வருமானத்தை மேம்படுத்துதல் மற்றும் செயற்பாடுகளின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

 இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் குழுவுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இது தொடர்பில் கருத்து வெளியிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 அரசாங்கத்தின் விரிவான பொருளாதார மற்றும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் தொடர்பில் இவ்விரு திணைக்களங்களின் வருமானம் மற்றும் செயற்பாடுகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. 

வருமான முகாமைத்துவம் மற்றும் வரி அறவீடுகளில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து இரு திணைக்கள அதிகாரிகளும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தெரிவித்தனர். 

 உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையில் பலமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் அந்த பிரச்சினைகளை வினைத்திறனுடன் கையாள்வதன் அவசியம் குறித்தும் அங்கு வலியுறுத்தப்பட்டதாக ஜனாதிதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

வரி ஏய்ப்பைத் தடுப்பது மற்றும் வரிச் சட்டங்களை வலுவாகவும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதன் மூலம் வருவாய் சேகரிப்பை மேலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 

 இதேவேளை, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும், இந்நாட்டிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையில் நேற்று (09) பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அங்கு சுவிஸ் தூதுவர் கலாநிதி சிறிவால்ட்டை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார். 

 ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர், இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஊழலுக்கு எதிரான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். பின்னர், இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியூமன் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் கலந்துரையாடியதுடன், இலங்கையின் அபிவிருத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஜேர்மனி ஆதரவு வழங்கும் என தூதுவர் குறிப்பிட்டார். 

 இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பைதுன் மஹாபண்ணபொன் மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற தாய்லாந்து அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர், தாய்லாந்தின் மகா வஜிர லோன் கோன் அனுப்பிய விசேட வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதிக்கு கையளித்தார்.

 இதேவேளை, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திருமதி டிரின் தி டாமிற்கும் இடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது. வியட்நாமிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவையை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!