பிறப்பு முதல் இறப்பு வரை நல்ல மன ஆரோக்கியத்தை பேணுவது முக்கியம்! பிரதமர் ஹரிணி
பிறப்பு முதல் இறப்பு வரை நல்ல மன ஆரோக்கியத்தை பேணுவது முக்கியம் என மனநல தினச் செய்தியில் பிரதமர் ஹரிணி அமர சூரிய தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2024 உலக மனநல தினம், பணியிடத்தின் பௌதீக சூழல் நிலைமை, மன அழுத்த மேலாண்மை செய்தல் முதல் செயல்படுத்தல் மற்றும் சமூகதிற்கு இயைவாக்குதல் வரையான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
பணியிடத்தில் மனநலத்திற்கு முதலிடம் கொடுப்போம் என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருள். மன ஆரோக்கியத்திற்கும் பணியிடத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவைப் புரிந்துகொள்வதும் முக்கியம். ஆரோக்கியமான பணியாளர்கள் கூட மோசமான பணிச்சூழலில் உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.
பணியாளர்கள் உணர்ந்து மனநலத்தில் கவனம் செலுத்தினால், அது ஊழியர்களின் மன அழுத்தம் குறைதல், பணிக்கு வராமல் இருப்பது குறைவடைதல் மற்றும் அவர்களின் வேலையில் ஈடுபாடும் அதிகரிக்கும்.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனநல சுதந்திரத்தை அனுபவிப்பதன் மூலம் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது எனது எண்ணம் என தெரிவித்துள்ளார்.