மில்டன் புயல் - கனடிய விமான சேவைகள் பாதிப்பு

#Flight #Canada #America #Strom #cancelled
Prasu
1 month ago
மில்டன் புயல் - கனடிய விமான சேவைகள் பாதிப்பு

அமெரிக்காவின் புளொரிடா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் புயல் நிலைமை காரணமாக கனடாவில் சில விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 குறிப்பாக புளொரிடா மாகாணத்திற்கான விமான பயணங்களில் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன. ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

புளொரிடாவிற்கான விமான பயணங்களை பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் விமான நிலையத்தின் புளொரிடா மாகாணத்தின் பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 குறைந்தபட்சம் ஐந்து விமான நிலையங்கள் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மில்டன் என்ற இந்த புயல் பாரிய சக்தி வாய்ந்த ஓர் புயல் காற்று என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!