ஓய்வை அறிவித்த வங்காளதேச வீரர் மஹ்மதுல்லா

#Cricket #Bangladesh #Player #retirement
Prasu
1 year ago
ஓய்வை அறிவித்த வங்காளதேச வீரர் மஹ்மதுல்லா

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

இந்த நிலையில், வங்காளதேச அணி வீரர் மஹ்மதுல்லா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐதராபாத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். 

வங்காளதேச கிரிக்கெட் அணிக்காக இதுவரை 140 போட்டிகளில் விளையாடியுள்ள மஹ்மதுல்லா, பேட்டிங்கில் 2,394 ரன்களையும், பந்துவீச்சில் 40 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4