இலங்கையின் பொருளாதார நிலை ஸ்திரமடைந்துள்ளது! உலக வங்கி

#SriLanka #World Bank
Mayoorikka
1 month ago
இலங்கையின் பொருளாதார நிலை ஸ்திரமடைந்துள்ளது! உலக வங்கி

இலங்கையின் பொருளாதார நிலை ஸ்திரமடைந்துள்ளது என தெரிவித்துள்ள உலக வங்கி சீர்திருத்தங்களை தொடர்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளது.

 2024 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.4 வீதமாக காணப்படும் என தெரிவித்துள்ள உலக வங்கி முன்னைய எதிர்வுகூறல்களை விட இது முன்னேற்றகரமான நிலையென குறிப்பிட்டுள்ளது.

 தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறையில் நான்கு காலாண்டுகளாக ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் முக்கியமான கட்டமைப்பு மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுமே இதற்கு காரணம் என உலக வங்கிதெரிவித்துள்ளது.

 எனினும் பொருளாதார மீட்சி இன்னமும் பலவீனமான நிலையிலேயே உள்ளது என குறிப்பிட்டுள்ள உலக வங்கி நுண்பொருளாதார ஸ்திரதன்மையை பேணுதல்இகடன்மறுசீரமைப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதுஇவருமானத்தை அதிகரித்து வறுமையை குறைப்பதற்காக கட்டமைப்பு சீர்திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுப்பது ஆகியவற்றிலேயே பொருளாதார மீட்சி தங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!