பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - ஷெஹான் சேமசிங்க அறிவிப்பு!

#SriLanka
Thamilini
1 year ago
பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - ஷெஹான் சேமசிங்க அறிவிப்பு!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.  

கடந்த வருடம் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக நாடு பல்வேறு பொருளாதார பாதிப்புகளை சந்தித்ததாகவும், வங்குரோத்து நிலைக்கு ஆளான பின்னர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 நாடும் பொருளாதாரமும் ஸ்திரமாக இருக்கும் போது அதன் பலன்கள் மக்களுக்கே கிடைக்கும் என்பதால் அதனை மக்கள் புரிந்து கொள்ள முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ஆனால் ஒரு நாடு என்ற வகையில் மக்கள் செய்த தியாகங்கள் மற்றும் செய்த சாதனைகள் குறித்து மக்களுக்கு சரியான புரிதல் இல்லை என தான் நம்புவதாகவும், அதை இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 இதனையடுத்து கடந்த அரசாங்கம் பெரும் முயற்சியுடன் கட்டியெழுப்பிய கொள்கை ரீதியான அரசியல் பாதையை மக்கள் நிராகரித்தமையால் ஏமாற்றமடைந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4