சீனாவில் சிறை வைக்கப்பட்டுள்ள 10,000 அவுஸ்ரேலியர்கள்!
அவுஸ்திரேலியர்கள் உட்பட சுமார் பத்தாயிரம் வெளிநாட்டவர்கள் சீனாவில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செனட் குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2013ஆம் ஆண்டு சீனாவில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய முன்னாள் ஊடகவியலாளரும் வர்த்தகருமான பீட்டர் ஹம்ப்ரி என்ற நபரே இந்தத் தகவலை வெளிப்படுத்தியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பீட்டர் ஹம்ப்ரி உடல்நலக்குறைவு காரணமாக ஜூன் 2015 இல் விடுவிக்கப்பட்டதாகவும், அதே மாதத்தில் அவரது மனைவியை விடுவிக்க சீனா நகர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறையில் இருக்கும் போது சேகரிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் சீனாவில் சிறையில் உள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரம் என்றும் அவர்களில் கணிசமானவர்கள் எந்த குற்றமும் இன்றி சிறையில் இருப்பதாகவும் அவர் மதிப்பிட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 50 ஆண்டுகளாக சீனாவுடன் வர்த்தகம் செய்து வரும் அவர், சீன வம்சாவளியைச் சேர்ந்த தனது அமெரிக்க மனைவியுடன், சட்டவிரோத உளவு மற்றும் தகவல் சேகரிப்பு ஆகிய பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பீட்டர் ஹம்ப்ரியும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்ட போது சீனாவில் விசாரணை ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வந்தனர், மேலும் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு சீனாவில் ஆபத்து இல்லாமல் வர்த்தகம் செய்ய தேவையான ஆலோசனைகளை நிறுவனம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.