ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் வாய்ப்பை இழந்த சவுதி

#UN #Membership #SaudiArabia
Prasu
1 month ago
ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் வாய்ப்பை இழந்த சவுதி

சவுதி அரேபியா மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக வலது குழுக்கள் புகார் அளிக்க ஐ.நா.வின் மனித உரிமைகள் குழுவில் இணைவதற்கான வாய்ப்பை சவுதி அரேபியா இழந்துள்ளது.

193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. சபை, 18 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பபை நடத்தியது. இவர்கள் 47 நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இடம் பிடிப்பார்கள். 

புவியியல் சார்பிலான பிரநிதிகள் அடிப்படையில் உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். இவர்கள் வடகொரியா, ஈரான், மியான்மர் மன்றும் உக்ரைன் போரில் ஆகிவற்றில் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து தகவல் சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்த வருடம் ஆசிய-பசிபிக் குழுவில் ஐந்து இடங்களுக்கு ஆறு நாடுகள் போட்டியிட்டன. இதில் தாய்லாந்து 177 வாக்குகள் பெற்றது. சைப்ரஸ், கத்தார் தலா 167 வாக்குகள் பெற்றன. தென்கொரியா 161 வாக்குகள் பெற்றது. மார்ஷல் தீவு 124 வாக்குகள் பெற்றது. சவுதி அரேபியா 117 வாக்குகள் பெற்றர்து.

இந்த வாக்கெடுப்பிற்கு முன்னதாக, ஐ.நா.வுக்கான மனித உரிமை கண்காணிப்பு இயக்குனர் லூயிஸ் சார்போன்னோ, மனித உரிமை கவுன்சிலில் பணியாற்ற சவுதி அரேபியா தகுதியற்றது எனத் தெரிவித்தார்.

2022 மற்றும் 2023-ல் ஏமன்-சவுதி எல்லையில் எத்தியோப்பியால் இருந்து புலம் பெயர்ந்தவர்களை சவுதி எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். 

இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 2018-ல் சவுதி அரேபிய பத்திரிகையாளர் இஸ்தான்புல்லில் கொலை செய்யப்பட்டதில் அரசின் செயல்பாடு ஆகியவற்றை சுட்டிக்காட்டினார்.

 மேலும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது அதுபோன்ற அட்டூழியங்களைச் செய்து, அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டனையிலிருந்து விலக்கப்படுவதை உறுதி செய்யும் அரசாங்கங்கள், ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பின் உயர்மட்டக் குழுவில் இடம் பெறக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!