மீண்டும் இந்தியாவில் தமது அறப்பணி கொடையை ஆரம்பித்த தியாகி!

#SriLanka #Tamil Nadu #Thiyagendran Vamadeva
Mayoorikka
1 year ago
மீண்டும் இந்தியாவில் தமது அறப்பணி கொடையை ஆரம்பித்த தியாகி!

இந்தியாவில் இருக்கின்ற ஈழ அகதி முகாம்களுக்கு சென்று கொடைகோன்   வாமதேவன் தியாகேந்திரன்  தியாகி அவர்கள் கிட்டத்தட்ட 3 லட்சம் இந்திய ரூபாய்கள் பெறுமதியான ஆட்டோக்களை ஈழ அகதி முகாமில் இருக்கின்ற வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற மக்களுக்கு இன்று வழங்கி வைத்தார். 

 அத்துடன் இன்று எம்ஜிஆர் நினைவு மன்றத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். மேலும் பல கொடைகளை இந்தியாவிலே ஈழத் அகதி முகங்களுக்கும் மற்றும் இந்தியாவிலேயே இருக்கின்ற ஒரு சில வறுமைப்பட்ட மக்களுக்கும் உதவி செய்வதற்காக தற்பொழுது தமிழ்நாட்டிலே தங்கி இருக்கிறார்.

 அத்துடன் ஜீ தமிழில் தொலைக்காட்சியில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒரு சில போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்குவதற்காகவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

 மீண்டும் தியாகியின் கொடை இந்தியா தமிழ்நாட்டிலே ஈழத் தமிழ் அகதிகளுக்கும் மற்றும் இந்திய மக்களுக்காவும் தொடங்குகிறது அவருடைய கொடை மீண்டும் தொடங்கியதையிட்டு லங்கா4 ஊடகம் நன்றி கூருகின்றது.

 இதேவேளை கடந்த ஐம்பது வருடங்களாக இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகளாவிய ரீதியிலே மக்கள் கொடை செய்து வந்த தியாகி அவர்கள், கடந்த சில மாதங்களிற்கு முன்னர் இலங்கையில் அவருடைய மகளின் பிறந்த தினத்தின் போது இலங்கையிலே மாபெரும் தொகையில் வறிய மக்களுக்கு உணவுப் பொதிகள் மற்றும் மருத்துவ செலவுகளை வழங்கி வைத்த நிலையில் ஒரு சில ஊடகங்கள் அவர் செய்த ஒரு செயலை திரிபுபடுத்தி தமது பிழைப்பு வாதத்திற்காக அவரை சிக்கலில் மாட்ட வைத்ததன் காரணத்தில் சில சட்ட திட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

 இந்த நிலையில் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் அவர் வழங்கி வந்த நன்கொடைகள் அனைத்தையும் இடைநிறுத்தியிருந்தார். 

இந்த நிலையில்மீண்டும் இன்று தமிழ்நாட்டிலே தமது அறப்பணி கொடையை மீண்டும் இன்று ஆரம்பித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4