மண்சரிவு தொடர்பில் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

#SriLanka
Dhushanthini K
1 month ago
மண்சரிவு தொடர்பில் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (11) மாலை 4:00 மணி முதல் நாளை (12) மாலை 04:00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதிர தெரிவித்தார். 

 இதன்படி, பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2ஆம் கட்டத்தின் கீழும், 1ஆம் கட்டத்தின் கீழும் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டம் - சீதாவக, ⁠படுக்கை 

 களுத்துறை மாவட்டம்- வலல்லாவிட்ட, ஹொரண, ⁠இங்கிரிய, மத்துகம, தொடங்கொட, புலத்சிங்கள, பாலிந்தனுவர, அகலவத்தை

 கேகாலை மாவட்டம் - ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, வரகாபொல, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, மாவனெல்ல, அரநாயக்க 

 இரத்தினபுரி மாவட்டம் - அஹெலியகொட, கிரியெல்ல, ⁠அயகம, ⁠அலபத்த, கலவான, இரத்தினபுரி, குருவிட்ட 

 எச்சரிக்கை நிலை 1 - எச்சரிக்கையாக இருங்கள் 

 பதுளை மாவட்டம்- எல்ல, ஹாலி அல, பசறை காலி மாவட்டம் - யக்கலமுல்ல, நயாகம களுத்துறை மாவட்டம் - பேருவளை 

 கேகாலை மாவட்டம் - கலிகமுவ குருநாகல் மாவட்டம் - நாரம்மல, பொல்கஹவெல, அலவ்வ 

 நுவரெலியா மாவட்டம் - அம்பகமுவ இரத்தினபுரி மாவட்டம் - கஹவத்தை, ஓபநாயக்க, பெல்மதுல்ல, நிவித்திகல

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!