மகளிர் T20 உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறிய இலங்கை

#SriLanka #Women #T20 #WorldCup
Prasu
1 year ago
மகளிர் T20 உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறிய இலங்கை

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 15 ஆவது போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஷார்ஜாவில் நடைபெற்ற குறித்த போட்டியில் இலங்கை மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சமரி அத்தப்பத்து 35 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் 116 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து மகளிர் அணியின் சார்பில் ஜோர்ஜியா ப்ளிம்மர் 53 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

 இதற்கமைய இலங்கை மகளிர் அணி எவ்வித வெற்றிகளையும் பதிவுசெய்யாத நிலையில் மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4