சீரற்ற காலநிலையினால் 158,391 பேர் பாதிப்பு : 24 மணிநேரத்தில் 126 mm மழைவீழ்ச்சி பதிவு!

#SriLanka
Dhushanthini K
1 month ago
சீரற்ற காலநிலையினால் 158,391 பேர் பாதிப்பு : 24 மணிநேரத்தில் 126 mm மழைவீழ்ச்சி பதிவு!

சீரற்ற காலநிலையினால் 158,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டைச்சுற்றியுள்ள வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, இதுவரை 12 மாவட்டங்கள் மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்சமாக 126.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி அம்பாறை கல்முனை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

களனி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் களனிமுல்ல, கடுவெல உள்ளிட்ட அண்டிய பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், அத்தனகலு ஓயா பெருக்கெடுத்து ஓடியதால் கொழும்பு-குருநாகல் பிரதான வீதி ஜாஎல கொட்டுகொட சந்தியில் வெள்ளம் ஏற்பட்டது.

எவ்வாறாயினும், கம்பஹா நகரில் வெள்ளம் படிப்படியாக குறைவடைந்து வருகின்றது.

களுகங்கை மற்றும் குடுகங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் களுத்துறை மாவட்டத்தில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் தாழ்நிலப் பிரதேசங்கள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஹமில்டன் கால்வாய் நிரம்பி வழிவதால் புத்தளம் நாத்தாண்டி, தும்மோதர, மாவில உள்ளிட்ட பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின.

அத்தனகலு ஓயா, களனி, களு மற்றும் ஜிங் ஆற்றுப் படுகைகளின் வெள்ள அபாய நிலை குறைந்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்று இரவும் நாளையும் நாட்டின் பல மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், மறுஅறிவிப்பு வரும் வரை, அபாயகரமானதாகக் குறிப்பிடப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என, கடற்படையினர் மற்றும் மீனவ மக்களுக்கு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனிடையே மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளில் பெய்து வரும் மழையினால் அப்பகுதி மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பனிமூட்டமான நிலையில் வாகனங்களை ஓட்டும் சாரதிகள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!