வெளிநாட்டு வேலைவாய்ப்பில் முறைகேட்டிற்கு தீர்வு வழங்க நடவடிக்கை!

#SriLanka #Foriegn #Workers
Mayoorikka
1 month ago
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் முறைகேட்டிற்கு தீர்வு வழங்க நடவடிக்கை!

வேலையாட்களை வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்பும்போது அதிகாரிகள் உள்ளிட்ட இடைத்தரகர்கள் அவர்களிடமிருந்து முறைகேடாக பணம் அறவிடும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. 

 இந்த செயற்பாடுகளை புதிய அரசாங்கத்தின் மூலம் நூறு வீதம் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார்.

 புலம்பெயர் தொழிலாளர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்கவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதன் பிரகாரம் குறித்த வேலைத்திட்டத்துக்கு ‘தலைவருக்கு சொல்லுங்கள்’ என பெயரிடப்பட்டுள்ளதுடன் அதனை மக்கள் மயமாக்கும் நடவடிக்கை திங்கட்கிழமை (14) பணியகத்தில் இடம்பெற்றது. இதன்போது அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

 வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் பாரிய சமூக சேவை மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக நாட்டுக்கு நெருக்கடியாகி இருக்கின்ற வெளிநாட்டு செலாவனியை ஈட்டுகின்ற ஒரு பாரிய நிறுவனமாக எமது நிறுவனத்தை குறிப்பிடலாம்.

 என்றாலும் இந்த நிறுவனம் தொடர்பில் தற்போது நாட்டு மக்கள் மத்தியில் இருக்கும் நிலைப்பாடு துரிதிஷ்டமானதாகும். 

புதிய நோக்கு புதிய அரசாங்கம் என்றவகையில் முன்னுக்கு செல்லும் பயணத்துக்கு அந் மக்களுக்கு தேவையான சேவையை பெற்றுக்கொடுப்பதற்கு அவர்களின் பிரச்சினைகளை நாங்கள் தீர்க்க வேண்டும். விசேடமாக தொழிலாளர்களை வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்பும்போது அவர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளனர். 

பல்வேறு தராதரத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் தரகர்கள் இடைத்தரகர்களாக இருந்து அவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நடவடிக்கைகளை புதிய அரசாங்கத்தின் மூலம் நூறு வீதம் தடுப்பதற்கு எங்களால் நடவடிக்கை எடுக்கப்படும். 

 அதன் ஆரம்ப நடவடிக்கையாக, இந்த பிரச்சினைகளை சமர்ப்பிப்பதற்கு பொதுவான இடமொன்றை அமைப்பதற்கு நாங்கள் முயற்சித்தோம். அனைத்து வகையான குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்களை பதிவு செய்துகொள்வதற்காக, டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான காரியாலயத்தின் கீழ் மாடியில் ‘தலைவருக்கு சொல்லுங்கள்’ என்ற பெயரில் புதிய பிரிவு திறக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் எந்த பிரஜைக்கும் தங்களின் முறைப்பாடுகளை அங்கு சமர்ப்பிக்க முடியும். பல்வேறு வழிகள் ஊடாக எங்களுக்கு முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும். சில சந்தர்ப்பங்களில் வெளி நபர்களால் மேற்கொள்ளப்படும் அநீதிகளாக இருக்கலாம். இல்லாவிட்டால் அரச அதிகாரிகளால் இடம்பெறும் அநீதிகளாக இருக்கலாம். எந்தவகையில் அநீதி ஏற்பட்டாலும் அதற்கு தீர்வு வழங்குவதற்கு தராதரம் பார்க்காமல் நான் நடவடிக்கை எடுப்பேன். 

 தலைவருக்கு சொல்லுங்கள்’ எனும் இந்த நிகழ்ச்சிட்டத்தின் ஊடாக குறித்த பிரச்சினைகளை தலைவருக்கு அனுப்புவதுடன் அந்த பிரச்சினை தொடர்பில் எனது தனிப்பட்ட கவனத்தை செலுத்தி அதற்கு விரைவாக தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 முறைப்பாடுகளை கையளிக்க விசேட பிரிவொன்று பணியகத்தின் பிரதான காரியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக, முறைப்பாட்டு பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 முறைப்பாட்டாளர்களின் தனிப்பட்ட இரகசியங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 0112 864188 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் வழங்கப்படும் முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன் 0717 593 593 என்ற வட்சப் இலக்கம் அல்லது talktochairman@slbfe.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் முறைப்பாடுகளை அனுப்பிவைக்க வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!