இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்களை தயாரிக்க ஜனாதிபதி உத்தரவு!

#SriLanka #education #AnuraKumara
Dhushanthini K
1 month ago
இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்களை தயாரிக்க ஜனாதிபதி உத்தரவு!

உலகளாவிய தேவைகளை கருத்திற் கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

 இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் மனித வளத்தை மேம்படுத்தும் வகையில் பிள்ளைகள் அறிவாற்றலுடன் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

 ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16.10) நடைபெற்ற கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

அடுத்த 10 வருடங்களில் உலகிற்கு தேவையான மனித வளத்தை உருவாக்கும் பணியானது கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு எனவும், அதற்கான பரந்த நோக்குடன் கல்வி திட்டங்களை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

 ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சுக்களின் முன்னேற்ற மீளாய்வின் போது கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்களால் நடைமுறைப்படுத்தப்படும் ஐந்து திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

 பாடசாலைக் கல்வி, ஆசிரியர் கல்வி, இடைநிலைக் கல்வி, தொழிநுட்பக் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்வியின் அபிவிருத்தி ஆகிய விடயங்கள் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 இது தொடர்பான திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர். இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மிகவும் பயனுள்ள பாடசாலைகளாக மாற்றப்பட்டு பாடசாலைக் கல்வியை மறுசீரமைப்பதன் மூலம் பிள்ளைகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்கி சகல பிள்ளைகளும் கல்வி கற்கும் வகையில் கவனம் செலுத்தப்பட்டது. 

 விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்ப பாடத்திட்டங்களை உயர்தரத்திற்கு பயிலும் பள்ளிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவது குறித்து மேலும் விவாதிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!