பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசனம் வழங்கப்படும் முறை

#SriLanka #Election
Mayoorikka
5 days ago
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசனம் வழங்கப்படும் முறை

விகிதார தேர்தல் முறைமை பாராளுமன்றத்தேர்தலில் மாவட்ட விகிதாசார தேர்தல் முறையில் வெற்றி பெறும் கட்சிகளுக்கு ஆசனங்கள் பகிரப்படுவது எவ்வாறு? என்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 உதாரணமாக 7 ஆசனங்களை கொண்ட குறித்த ஒரு மாவட்டத்தில் A,B,C,D,E,F,G,H, ஆகிய கட்சிகள் போட்டியிட்டு அக்கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் பின்வருமாறு மாவட்டத்தில் அளிக்கப்பட்டு செல்லுபடியான மொத்த வாக்குகள் – 400000

 A – 140,000

 B – 110,000 C – 52,500

 D – 30,000

 E – 27,500

 F – 17,500

 G – 12,500

 H – 10,000

 தற்போது முதலாவது ஆசனம் மாவட்டத்தில் முதலாம் அதிகூடிய வாக்குகளைப்பெற்ற கட்சிக்கு வழங்கப்படும். அதனை போனஸ் (Bonus)ஆசனம் என்றும் சொல்லப்படும் இதனடிப்படையில் இங்கு 140,000 வாக்குகளைப்பெற்ற கட்சி A ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ளும்.

 அடுத்து வெட்டுப்புள்ளி – 5% என்ற வெட்டுப்புள்ளிக்கு குறைவான வாக்குகளை பெற்ற கட்சியின் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. 

அதைதவிர்த்து வரும் கட்சிகளின் வாக்குகள் கவனத்திற்கெடுத்துக்கொள்ளப்பட்டு அதனை எஞ்சிய 6ஆசனங்களால் பிரித்தால் வெட்டுப்புள்ளி வரும் .

 இதனடிப்படையில் 400, 000 x 0.05 = 20,000 எனவே 20,000 இற்கு குறைவான வாக்குகளை பெற்ற கட்சிகள் F,G,H பெற்றுக்கொண்ட வாக்குகள் கணக்கெடுக்கப்படாது.

 போனஸ் ஆசனம் தள்ளி மீதம் உள்ள 6 ஆசனங்கள், இவை கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் பிரிக்கப்படும் தொடர்ந்து போட்டியில் இருக்கும் கட்சிகளின் மொத்த வாக்குகள் 140,000 + 110000 +52, 500+ 30,000 + 27,500 = 360,000 எனவே ஒரு ஆசனத்தை பெற தேவையான வாக்குகள் 360,000/6 = 60,000 முதல் சுற்று – முதல் சுற்றில் 60,000 வாக்குகளுக்கு ஒரு ஆசனம் வீதம் வழங்கப்படும்.

 அதன் படி கட்சி A – 2 ஆசனங்கள் 140,000 – 120,000= 20,000 மீதி

 கட்சி B – 1 ஆசனம் 110, 000- 60,000= 50,000 மீதி ஏனைய C,D,E கட்சிகளுக்கு 60,000 வாக்குகள் இல்லாததால் முதல் சுற்றில் ஆசனங்கள் கிடைக்காது, 

இருந்தும் அவர்களின் வாக்குகள் மீதியாக கணிக்கப்பட்டு இரண்டாம் சுற்றில் போட்டி போடும் இது வரை A – 1 (போனஸ்) + 2 ஆசனங்கள் B – 1 ஆசனம் மொத்தமாக 4 ஆசனங்கள் வழங்கப்பட்டு விட்டன. 

மீதம் 7- 4 = 3 ஆசனங்கள் மீதியாக உள்ளன. இரண்டாம் சுற்று (மீதி வாக்குகள்)

 A – 20,000

 B – 50,000

 C – 52,500 D – 30,000

 E – 27,500 இதன் அடிப்படையில் மீதி வாக்குகள் அதிகம் உள்ள முதல் மூன்று கட்சிகளுக்கும் தலா ஒரு ஆசனம் வீதம் வழங்கப்படும்

 C – 52,500 ஒரு ஆசனம்

 B – 50,000. ஒரு ஆசனம்

 D – 30,000 ஒரு ஆசனம்

 இறுதி முடிவு:

 கட்சி A – 1+2+0 = 3 ஆசனங்கள்

 கட்சி B – 1+1 = 2 ஆசனங்கள்

 கட்சி C- 0+1 = 1 ஆசனம்

 கட்சி D- 0+1 = 1 ஆசனம் கட்சி E- 0+0 = 0

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!