சுவிஸ் மக்களுக்கு சுகாதாரத்துறையின் ஆலோசனை!

#SriLanka #swissnews
Dhushanthini K
1 month ago
சுவிஸ் மக்களுக்கு சுகாதாரத்துறையின் ஆலோசனை!

சுவிட்சர்லாந்தில் ப்ளூ காய்ச்சல் சீஸன் துவங்கியுள்ள நிலையில், மருந்தகங்களில் போதுமான அளவில் தடுப்பூசிகள் உள்ளதாகவும், ஆகவே, எளிதில் பாதிக்கப்படும் அபாயத்திலுள்ளோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் ஜெனீவா மாகாண சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் ப்ளூ மற்றும் கோவிட் தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

தடுப்பூசிகள், மோசமான நோய்களிலிருந்து பாதுகாக்கக்கூடியவை என சுவிஸ் பெடரல் சுகாதார அலுவலகமும் தெரிவித்துள்ளது. மேலும், தடுப்பூசிகளுக்கான கட்டணம், காப்பீட்டுத் தொகையில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மக்கள் வீட்டை காற்றோட்டமாக வைத்துக்கொள்ளவும், கைகளைக் கழுவவும், அறிகுறிகள் காணப்பட்டால் மாஸ்க் அணிந்துகொள்ளுமாறும் ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!