சுவிற்சர்லாந்து பேர்ன் பல்சமய இல்லம்! 10 ஆண்டுகள் ஐரோப்பாத் திடலில் பூர்த்தி

#Switzerland
Mayoorikka
1 month ago
சுவிற்சர்லாந்து பேர்ன் பல்சமய இல்லம்!  10 ஆண்டுகள் ஐரோப்பாத் திடலில் பூர்த்தி

சுவிற்சர்லாந்து பேர்ன் பல்சமய இல்லம் நாம் ஐரோப்பாத்திடலில் 10 ஆண்டுகள் நிறைந்துள்ளதை கொண்டாடவுள்ளது.

 20.10.2024 முதல் 14.12.2024 வரை பத்து வெவ்வேறு நிகழ்வுகளுடன் எங்களுடன் சேர்ந்து கொண்டாட அனைவரையும் அழைக்கின்றோம்.

 பல்சமய இல்லம் – பண்பாட்டு உரையாடல் நடுவம் கடந்த ஒரு பத்து ஆண்டின் பண்பாட்டுப் பரிமாற்றத் திடலாகவும், ஒற்றுமையின் கூடமாகவும் உள்ளது, உலகம் இங்கு ஒன்று சேரும் இடமாக விரிந்துள்ளது. பத்து ஆண்டுகளின் வரலாற்றையும், பல ஊக்கமான கதைகளையும் நாம் மீட்டப் பார்க்கிறோம். 

 கடந்த ஆண்டுகளில் மதங்களின் பல்சமய இல்லம் எப்படி மாறிவிட்டது என்பதில் நாம் பெருமை கொள்கின்றோம், அது பெரியதாகவும், சிறிது நிலையானதாகவும் மாறி இருக்கலாம், ஆனால் அதன் ஒளி மற்றும் ஆற்றல் எதுவும் குறையவில்லை.

 துலைத்திங்கள் (அக்டோபர்) 20 அன்று எங்கள் நினைவு தொகுப்பின் நூல் வெளியீட்டுடன் விழாத் தொடங்குகிறது. <ஐரோப்பா திடலில் உலகம் – மதங்களின் வீட்டிலிருந்து கதைகள் – பண்பாட்டு உரையாடல்> விழாக்கொண்டாட்டத்துடன் தொடங்கப் பெற்று டிசம்பர் 14 அன்று – சரியாக பல்சமய இல்லத்தின் பத்தாவது ஆண்டுப் பெரும்கொண்டாட்ட நிகழ்வுடன் முடிவடைகிறது.

 10 விழாக்களிலும் தமிழ் மக்களும் பங்கெடுக்க பல்சமய இல்லத்துடன் இணைந்து சைவநெறிக்கூடத்தின் பெயராலும் அழைக்கின்றோம்.

 முழுமையான நிகழ்ச்சி நிரலை இங்கு சுட்டி தரவிறக்கலாம்:

 https://haus-der-religionen.ch/wp21/wp-content/uploads/2024/09/2024_Jubilaeumsporgramm_Haus_der_Religionen.pdf

https://haus-der-religionen.ch/

https://www.telebaern.tv/telebaern-news/haus-der-religionen-in-bern-vor-jubilaeumsfeier-159091926?utm_source=shared-copyToClipboard&utm_medium=shared&utm_campaign=Social%20Media

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!