கனடாவில் வீடொன்றில் பாரிய தீ விபத்து - குழந்தை உட்பட மூன்று பேர் பலி
கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தக் கூடிய அறிவிப்பினை ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 2026ம் ஆண்டிலிருந்து ஒன்றாரியோ மாகாணத்தில் மருத்துவ கற்கைகளுக்காக வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
95 வீதமான சந்தர்ப்பம் ஒன்றாரியோ மாகாண மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும், 5 வீதம் ஏனைய மாகாண மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பநல மருத்துவர்களாக எதிர்காலத்தில் சேவையாற்றுவதாக உறுதியளிக்கும் மாணவர்களுக்கு ஒன்றாரியோ அரசாங்கம் கூடுதல் சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
முதல் டக் ஃபோர்ட் தலைமையிலான அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்களை மருத்துவ கல்லூரிகளில் சேர்ப்பதில்லை என தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதேவேளை, கனடாவில் சர்வதேச மாணவர்கள் கல்வியை தொடர்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீசா வழங்குவதில் காணப்படும் தாமத நிலைமைகளினால் மாணவர்கள் பாதிப்புகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
கனடிய பல்கலைக்கழகங்களில் கற்று வரும் மாணவர்கள் இந்த நெருக்கடியினால் தங்களது கல்வியை உரிய முறையில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் தங்களது கல்வி ஆண்டுக்கான கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.