பிரான்ஸில் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கையர்!
பிரான்ஸில் குற்றமிழைக்கும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சமகால அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் பிரான்ஸில் குடும்ப வன்முறை உட்பட பல்வேறு குற்றச்செயல்களுக்கு முகங்கொடுத்துள்ள பல தமிழர்கள் விசா பறிக்கப்பட்டு நாடு கடத்தப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரான்ஸில் பயணிகளை விரட்டி விரட்டி தாக்கிய இலங்கை தமிழரான, 53 வயதான வி திருச்செல்வம் என்பவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையில் வைத்து பயணிகள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இவ்றி குர்-கூ-ரோன் (Évry-Courcouronnes) குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 16ஆம் திகதி கொர்பெய் எசோன் ( Corbeil-Essonnes) பயணி ஒருவர் மீது கத்தியால் குத்தியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர் பல்வேறு வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே பொலிஸாரினால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்தை வெளிப்படையான எவ்வித காரணமின்றி, ரயில் பயணிகளை துரத்தி சென்று கத்தியால் குத்தியுள்ளார்.
ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் குடிபோதையில் இருந்த இலங்கையரை கைது செய்துள்ளனர். இலங்கையரின் தீவிர தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
விசாரணையின் போது குற்றவாளியான இலங்கையர் எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் மறுப்பும் தெரிவிக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.
தலைமை நீதிபதி பல்வேறு விதமான கேள்விகளை கேட்ட போதும் இலங்கையர் தொடர்ந்தும் மௌனம் காத்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.