ஸ்பெயினில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு - பலி எண்ணிக்கை உயர்வு

#Death #people #Flood #HeavyRain #Spain
Prasu
3 weeks ago
ஸ்பெயினில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு - பலி எண்ணிக்கை உயர்வு

ஸ்பெயின் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள வாலென்சியாவில் கடும் மழை பெய்தததை தொட்ர்ந்து அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இந்த மழை வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. தெருக்கள் ஆறுகளாக மாறின. 

ரெயில் தண்டவாளங்கள், சாலைகள் கடுமையாக சேதமடைந்தன. மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பெய்த கனமழையால் மலாகாவில் இருந்து வாலென்சியா வரை எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. 

வாலென்சியாவில் உள்ள 12-க்கும் மேற்பட்ட நகரங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 150-ஐ க் கடந்துள்ளது. மேலும், பலர் மாயமாகி உள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

 சுனாமி பேரலைகள் ஏற்படுத்தும் பாதிப்பை காட்டிலும் இது அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் மிகக் கொடூரமாக தேசிய பேரிடரில் இதுவும் ஒன்று என அந்நாடு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!