வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? நவம்பர் 02 (November 02)

#history #Lanka4 #World
Prasu
2 weeks ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? நவம்பர் 02 (November 02)

கிரிகோரியன் ஆண்டின் 306 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 307 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 59 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

619 – மேற்குத் துருக்கிய கானேடின் ககான் சீன அரண்மனை ஒன்றில் கிழக்குத் துருக்கியக் கிளர்ச்சியாளர்களினால் கொல்லப்பட்டார்.

1675 – பிளைமவுத் குடியேற்ற ஆளுநர் யோசியா வின்சுலோ நரகான்செட் பழங்குடியினருக்கு எதிரான போரில் குடியேற்ற இராணுவத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார்.

1795 – ஐந்து நபர்களைக் கொண்ட புரட்சி அரசு பிரான்சில் நிறுவப்பட்டது.

1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரிசியசு சென்றனர்.

1868 – நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது.

1868 – இலங்கையில் சப்ரகமுவாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

1889 – வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா ஆகிய குடியேற்றங்கள் ஐக்கிய அமெரிக்காவின் 39வது, 40வது மாநிலங்களாக முறையே இணைந்தன.

1899 – இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவில் பூர்கள் பிரித்தானியர்கள் வசம் இருந்த லேடிசிமித் பகுதியை 118 நாட்கள் பிடித்து வைத்திருந்தனர்.

1912 – பல்கேரியா உதுமானியப் பேரரசை லூல் பர்காசு சமரில் தோற்கடித்தது.

1914 – முதலாம் உலகப் போர்: உருசியா உதுமானியப் பேரரசுடன் போரை ஆரம்பித்தது. இதனை அடுத்து தார்தனெல்சு நீரிணை மூடப்பட்டது.

1917 – உருசியப் புரட்சியை முன்னெடுக்க பெத்ரோகிராத் சோவியத்தின் இராணுவ புரட்சிச் செயற்குழு தனது முதலாவது கூட்டத்தைக் கூட்டியது.

1917 – பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் ஆர்தர் பால்போர் வெளியிட்ட பிரகடனத்தில் யூதர்களுக்கு பாலத்தீன நிலத்தில் ஒரு தேசியத் தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு ஆதரிக்கிறது எனக் கூறப்பட்டது.

1920 – அமெரிக்காவில் பென்சில்வேனியா, பிட்சுபர்கில் முதலாவது வணிக-நோக்கு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.

1936 – பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது.

1936 – கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.

1949 – இடச்சு-இந்தோனேசிய வட்டமேசை மாநாடு முடிவடைந்தது. நெதர்லாந்து இடச்சு கிழக்கிந்தியாவின் உரிமையை இந்தோனேசியாவுக்குக் கொடுத்தது.

1951 – சுயஸ் கால்வாய் வலயத்தில் கிளர்ந்த நெருக்கடி நிலையை சமாளிக்க 6,000 பிரித்தானியப் படையினர் எகிப்துக்கு அனுப்பப்பட்டனர்.

1953 – பாக்கித்தான், பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1956 – அங்கேரியப் புரட்சி: அங்கேரிய நிலைமை குறித்து ஆராய சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் ஏனைய கம்யூனிச நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தார். சோசப்பு பிரோசு டிட்டோவ்சின் ஆலோசனைக்கு அமைய யானொசு காதார் அங்கேரியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டார்.

1956 – சூயெசு நெருக்கடி: இசுரேல் காசாக்கரையை ஆக்கிரமித்தது. 1963 – தெற்கு வியட்நாம் அரசுத்தலைவர் நியோ டின் டியெம் இராணுவப் புரட்சியை அடுத்து கொலை செய்யப்பட்டார்.

1964 – சவூதி அரேபியாவின் மன்னர் சவூத் குடும்பப் புரட்சி ஒன்றை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர் பைசல் மன்னரானார்.

1965 – வியட்நாம் போரில் நேப்பாம் குண்டுகள் வீசப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நண்பர்களின் சமய சமூகத்தைச் சேர்ந்த நார்மன் மொரிசன் என்பவர் பென்டகன் முன்னே தீக்குளித்து மாண்டார்.

1966 – கியூபாவைச் சேர்ந்த 123,000 பேருக்கு ஐக்கிய அமெரிக்காவில் நிரந்தர வதிவுரிமை வழங்கும் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது.

1974 – தென் கொரியத் தலைநகர் சியோலில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் உயிரிழந்தனர்.

1984 – அமெரிக்காவில் 1962 இற்குப் பின்னர் முதல் தடவையாகப் பெண் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

1999 – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பத்திரிகையாளருமான அற்புதராஜா நடராஜா கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2000 – பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர்.

2006 – ஈழப்போர்: கிளிநொச்சி வைத்தியசாலை சுற்றவுள்ள பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2007 – இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

2007 – மெக்சிகோவின் கிரிஜல்வா ஆறு பெருக்கெடுத்து 50 ஆண்டுகளில் காணாத அளவு பாரிய வெள்ளம் ஏற்பட்டதில் 800,000 பேர் வீடற்றவர்களாகினர்.

பிறப்புகள்

971 – கசினியின் மகுமூது (இ. 1030)

1795 – ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11வது அரசுத்தலைவர் (இ. 1849)

1815 – ஜார்ஜ் பூல், ஆங்கிலேயக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1864)

1833 – மகேந்திரலால் சர்க்கார், இந்திய மருத்துவர் (இ. 1904)

1861 – ஜூல்ஸ் கூலட், பிரான்சிய பூச்சியியலாளர் (இ. 1933)

1885 – த. வே. இராதாகிருட்டிணன், தமிழகத் தமிழறிஞர்

1885 – ஆர்லோவ் சேப்ளே, அமெரிக்க வானியலாளர் (இ. 1972)

1906 – பெங்கித் எட்லேன், சுவீடிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1993)

1929 – அமர் கோ. போசு, அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 2013)

1933 – பெ. சு. மணி, தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 2021)

1941 – அருண் சோரி, இந்திய அரசியல்வாதி, பத்திரிகையாளர்

 1948 – ஜோதிலட்சுமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2016)

1965 – சாருக்கான், இந்திய நடிகர், தயாரிப்பாளர்

1966 – டேவிட் சுவிம்மர், அமெரிக்க நடிகர்

1969 – மதுஸ்ரீ, இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி

1977 – ரேஷ்மா ஷெட்டி , அமெரிக்கக் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை, பாடகர்

1981 – ஈஷா தியோல், இந்திய நடிகை

1981 – மிட்செல் ஜோன்சன், ஆத்திரேலியத் துடுப்பாளர்

1987 – பாலா சரவணன், தமிழ்த் திரைப்பட நடிகர்

1990 – கெண்டல் ஸ்மித், அமெரிக்கப் பாடகர், நடிகர்

1995 – நிவேதா தாமஸ், இந்தியத் திரைப்பட நடிகை

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!