மின்னல் தாக்கங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை!

#SriLanka #weather
Thamilini
1 year ago
மின்னல் தாக்கங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை!

இன்று (2) மாலை வேளையில் தீவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை ஏற்படுவதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும் நிலவுவதால் மின்னலினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது. 

 பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

 மேற்கு, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில்  100mmக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் திணைக்களம் கோரியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4