இந்துக்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர் ட்ரூடோ

#PrimeMinister #Canada #Festival
Prasu
5 months ago
இந்துக்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர் ட்ரூடோ

கனடாவில் இயங்கி வந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை இந்தியா - கனடா இடையே மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இருநாட்டு தூதரக உறவுகளும் முறிந்த நிலையில் கனடாவில் வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவால் தங்களுக்கு சைபர் ஆபத்து உள்ளது என்றும் கனடா தெரிவித்துள்ளது. 

இவையனைத்தும் இந்தியாவைக் கோபப்படுத்தி உள்ள நிலையில் தற்போது கனடா அதிபர் ட்ரூடோ அந்நாட்டில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த இந்து மதத்தினருடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

 கடந்த சில மாதங்களில் தான் 3 இந்து கோவில்களுக்கு சென்றதாகவும் அங்கு தனது அதிஷ்டத்துக்காக கையில் அன்புடன் கயிறு கட்டி விடப்பட்டதாகவும் அதுவாக கழன்று விழும்வரை தான் அவற்றை அவிழ்க்கப்போவதில்லை என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!