பாகிஸ்தானில் அதிகரித்துள்ள காற்று மாசுபாடு : பாடசாலைகளை மூட நடவடிக்கை!

#SriLanka #Pakistan
Dhushanthini K
2 weeks ago
பாகிஸ்தானில் அதிகரித்துள்ள காற்று மாசுபாடு : பாடசாலைகளை மூட நடவடிக்கை!

காற்று மாசுபாடு காரணமாக பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பள்ளிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 இதன்படி, ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளை மூடுவதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 அலுவலகப் பணியாளர்களில் 50% பேர் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

 பாகிஸ்தான் சுகாதார அதிகாரிகள் மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

 கடந்த மாதம் முதல் பாடசாலை மாணவர்களின் வெளிப்புற நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பாடசாலை நேரமும் திருத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

 அதுமட்டுமின்றி, மோட்டார் ரிக்‌ஷாக்கள் மற்றும் ஃபில்டர்கள் இல்லாமல் பார்பிக்யூ வணிகங்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமாக கருதப்படும் லாகூர், நேற்று (03) உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் இரண்டாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!