இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை : சீர்குலைந்த கிராமங்கள், 10 பேர் பலி!

#SriLanka #volcano
Dhushanthini K
2 weeks ago
இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை : சீர்குலைந்த கிராமங்கள், 10 பேர் பலி!

இந்தோனேசியாவில் நேற்று (04.10) இரவு பாரிய எரிமலை வெடித்ததில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மவுண்ட் லெவோடோபி லக்கி என்ற 6,500 அடி உயரமுள்ள எரிமலை வெடித்து சாம்பல்களை வெளியேற்றி வருகிறது.

சாம்பல் குண்டுகள்" அருகிலுள்ள கிராமத்தின் மீது பொழிந்து, பல வீடுகளை எரிந்து நாசமாகியுள்ளன.

இந்நிலையில் இதன்காரணமாக கட்டடம் ஒன்றும் இடிந்து சேதமாகியுள்ளது. இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி  வுலாங்கிடாங் மாவட்டத்தின் ஆறு கிராமங்களிலும், இலே புரா மாவட்டத்தில் நான்கு கிராமங்களிலும் குறைந்தது 10,000 பேர் எரிமலை வெடிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் எரிமலை கண்காணிப்பு நிறுவனம் எரிமலையின் எச்சரிக்கை நிலையை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியது மற்றும் இன்று (04.11) நள்ளிரவுக்குப் பிறகு அடிக்கடி வெடிப்புகள் ஏற்படுவதால் விலக்கு மண்டலத்தை ஏழு கிலோமீட்டர் (4.3-மைல்) சுற்றளவுக்கு இரட்டிப்பாக்கியது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!