இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

#SriLanka #weather
Thamilini
1 year ago
இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்தில் சில இடங்களிலும் 100 mm வரை பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 மேலும், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும். 

 நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வகையில் வளிமண்டல நிலை தொடர்ந்தும் சாதகமாக இருப்பதால் மின்னலினால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4