மின்சார சபை தனியார் மயமாக்கப்படாது

#SriLanka #ElectricityBoard
Mayoorikka
2 weeks ago
மின்சார சபை தனியார் மயமாக்கப்படாது

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு கிடைத்த சமூக மாற்ற ஆணைக்கு இணங்க எரிசக்தி துறையில் முறையான சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.

 அரசிற்குச் சொந்தமான மின்சார சபை சொத்துக்களை தனியார் மயமாக்காமல் விரிவான பொது மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனையின் மூலம் மின்சாரச் சட்டத்தில் திருத்தம் மூலம் பல முயற்சிகள் செய்யப்பட உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு CEB தெரிவித்துள்ளது.

 அடுத்த ஐந்து ஆண்டுகளில் பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரச் செலவை அடைவதற்கான ஒரு வலுவான ஒற்றை-கொள்வனவாளர் சந்தையின் கீழ் ஒரு சுயாதீன இயக்க அமைப்புடன் மற்றும் இடைத்தாக்கமற்ற உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோக உரிமதாரர்கள் நிறுவப்பட்டுள்ளதாக CEB மேலும் தெரிவித்துள்ளது.

 எரிசக்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் எதிர்கால முயற்சிகளுக்கு அனைவரின் செயலூக்கமான பங்களிப்பைப் பெறுவதற்கு அனைத்து மட்டங்களிலும் உள்ள ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்றை உருவாக்குவதற்கான முன்மொழிவும் முன்வைக்கப்பட்டுள்ளது.

 மின்சாரத் துறை சீர்திருத்தங்கள் குறித்த நிகழ்நிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி 2024 ஒக்டோபர் 23 அன்று CEB இன் தலைவர் மற்றும் இயக்குநர்கள் குழுவினால் முழு CEB ஊழியர்களுக்கும் நடத்தப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!