அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - முழு விவரங்கள்

#Election #America #President #Trump #KamalaHarris
Prasu
2 weeks ago
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - முழு விவரங்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஸ்விங் ஸ்டேட்டசில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் வாக்குப்பதிவு நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. 

வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. 50 மாகாணகளில் மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும். 

அந்த வகையில் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார். ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

கருத்துருக்கணிப்புகளுக்கு முரணாக ஆரம்பத்தில் இருந்தே டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார். வழக்கமாக இழுபறி ஏற்படும் ஸ்விங் ஸ்டேட்சிலும் டிரம்ப் வெற்றி பெற்றார்.

எலக்ட்டோரல் வாக்குகளாகவன்றி மக்கள் செலுத்திய வாக்குகள் அடிப்படையில் கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு டிரம்ப்பின் குடியரசுக் கட்சி அதிக வாக்கு சதவீதத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. 

டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு மொத்தமாக 70,952,259 வாக்குகள் [51%] கிடைத்துள்ளது. கமலாவின் ஜனநாயக கட்சிக்கு 66,046,171 [47.50%] வாக்குகள் கிடைத்துள்ளது. 

மொத்தம் உள்ள 50 மாகாணங்களின் வெற்றிப் பட்டியல் டிரம்ப் வென்ற மாகாணங்கள் - அலபாமா, அலாஸ்கா, அரிசோனா , ஆர்கன்சாஸ், புளோரிடா, ஜார்ஜியா , இடாஹோ, இன்டியானா, அயோவா, கான்சாஸ், கென்டக்கி, லூசியானா, மிச்சிகன், மிஸிஸிப்பி, மிசெளரி, மோன்டனா, நெப்ரஸ்கா, நெவேடா, வடக்கு கரோலினா, வடக்கு டகோடா, ஓஹையா, ஆக்லஹோமா,பென்சில்வேனியா, தெற்கு கரோலினா, தெற்கு டகோடா, டென்னஸ்ஸி, டெக்ஸாஸ், உடா ,மேற்கு விர்ஜீனியா, விஸ்கான்சின், வியாமிங் என 31 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார். 

 கமலா ஹாரிஸ் வென்ற மாகாணங்கள் - கலிபோர்னியா, கொலராடோ, கனெக்டிகட் , டெலாவேர், ஹவாய், இல்லினாய்ஸ், மேரிலான்ட், மாஸசூட்ஸ் , மின்னசோட்டா, நியூ ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி, நியூ மெக்ஸிகோ, நியூயார்க், ஓரிகான், ரோட் தீவு, வெர்மான்ட், விர்ஜீனியா, வாஷிங்டன், டிஸ்டிரிக்ட் ஆப் கொலம்பியா 19 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!