IMF இன் 3ஆம் தவணை கடனின் பின் பொருளாதாரம் ஸ்திரமடையும்: ஜனாதிபதி
அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) மூன்றாவது தவணையை இலங்கை பெறும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் (14) நாட்டிற்கு வருகை தரவுள்ளதாகவும், மூன்றாவது மதிப்பாய்வை முடிக்க அண்ணளவாக மூன்று மாதங்கள் ஆகும் என்றும் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
இரண்டு தேர்தல்கள் காரணமாக மூன்றாவது பரிசீலனை தாமதமாகியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மூன்றாவது மீளாய்வை முன்னதாக திட்டமிட்டபடி செப்டம்பரில் ஆரம்பித்திருந்தால், டிசம்பருக்குள் அதனை முடித்திருக்க முடியும் என்றும் கூறினார்.
மூன்றாவது தவணையைப் பெற்ற பிறகு ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மையை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என அவர் மேலும் கூறினார்