வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரி
அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 2-வது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
டொனால் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் என தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே டொனால்டு டிரம்ப் அதிகாரிகளை அறிவித்து வருகிறார்.
வெற்றி உரையின்போது ஜே.டி. வின்ஸை துணை அதிபராக அறிவிப்பதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தன்னுடைய தேர்தல் பிரசார குழுவின் மானேஜராக திகழந்த சூசன் வைல்ஸ் என்ற பெண்மணியை வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக நியமித்துள்ளார்.
இந்த பதவிக்கு முதன்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் வெற்றியை நான் பெறுவதற்கு சூசன் வைல்ஸ் மிகவும் உதவியாக இருந்தார்.
என்னுடைய 2016 மற்றும் 2020 வெற்றிகரமான பிரசாரத்தின் ஒரு பகுதியாக அவர் இருந்தார். அவர் கடினமானவர். புத்திசாலி, புதுமையானவர். அத்துடன் உலகளவில் போற்றப்படுகிறவர்.
மதிக்கப்படுகிறவர் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற சூசி (சூசன் வைல்ஸ்) தொடர்ந்து அயராது உழைக்கிறார்.
அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி இருப்பது மிகவும் தகுதியான மரியாதை. அவர் நம் நாட்டைப் பெருமைப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.