நெதர்லாந்தில் இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்

#PrimeMinister #France #people #Attack #Israel #Netherland #condemn
Prasu
1 year ago
நெதர்லாந்தில் இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்

நெதர்லாந்து தலைநகர் Amsterdamல் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டி ஒன்றில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். 

இந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார். ”யூத மதத்துக்கு மீதான மிகப்பெரிய தாக்குதல்!” என இதனை நெதர்லாந்து பிரதமர் Dick Schoof தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவிக்கையில், "வரலாற்றில் மிகவும் அவமானகரமான மணிநேரங்கள் அவை! மிகவும் கடுமையான கண்டனங்கள்!" என தெரிவித்தார்.

 இந்த தாக்குதலை அடுத்து 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4