விரைவில் விசா பெற உதவும் திட்டத்தை ரத்து செய்த கனடா அரசு

#Canada #government #Visa #cancelled #scheme
Prasu
2 weeks ago
விரைவில் விசா பெற உதவும் திட்டத்தை ரத்து செய்த கனடா அரசு

கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். 

இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருநாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.

இதற்கிடையே, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாகக் கனடா வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மாரிசன் குற்றம்சாட்டினார். 

இதை கண்டித்து மாரிசனுக்கு எதிராக இந்தியா சம்மன் அனுப்பியது. மேலும் இந்திய அதிகாரிகளைக் கனடா அரசு உளவு பார்த்தாக மத்திய அரசு நேற்றைய தினம் புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. 

ஆடியோ மற்றும் வீடியோ மூலம் கனடா அரசால் இந்திய தூதரக அதிகாரிகள் உளவு பார்க்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கனடா, தங்களின் பாதுகாப்பாகவே அவர்கள் கண்காணிக்கப்பட்டதாகத் தெரிவித்தது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து கனடா வரும் மாணவர்கள் விரைவில் விசா பெற உதவும் Direct Stream Program (SDS) என்ற திட்டத்தை திடீரென கனடா அரசு ரத்து செய்துள்ளது.

இந்தியா, சீனா உட்பட 14 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கான விசா செயல்முறையை எளிதாக்கும் SDS திட்டம், 2018 ஆண்டு கொண்டு வரப்பட்டது. கனடாவில் உள்ள தற்காலிக குடியிருப்பாளர்களின் அளவைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

 SDS திட்டத்தின் மூலம், குறைந்தது 2 வாரங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கிடைக்கும். இதுவே சாதாரண முறையில் விசா பெற வேண்டும் என்றால் குறைந்தது 8 வாரங்கள் வரை ஆகும். இதனால் கனடா சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் இனி நீண்ட நாட்கள் விசாவுக்காக காத்திருக்க நேரிடும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!