மசாஜ் செய்வதாக கூறி பண மோசடி - ஐவர் கைது!

#SriLanka
Thamilini
1 year ago
மசாஜ் செய்வதாக கூறி பண மோசடி - ஐவர் கைது!

மசாஜ் செய்வதாக கூறி பண மோசடி செய்து கொள்ளையில் ஈடுபட்ட 5 சந்தேக நபர்களும் பெண் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மசாஜ் செய்து தருவதாக கூறி நபரை அழைத்து வந்து தாக்கி கத்தியை காட்டி மிரட்டி 10 இலட்சம் ரூபாவை இணைய வங்கி மூலம் கடனாக பெற்றுக் கொண்டனர். 

 பின்னர் பணப்பையில் இருந்த 15,000 ரூபா திருடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியுடன் கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். 

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 44 வயதுடையவர் எனவும் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

 சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட மேலும் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19, 21, 22 மற்றும் 23 வயதுடைய இரத்மலானை மற்றும் மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர்கள். பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4