பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர்
வர்த்தகப் போருக்கு வாய்ப்புள்ளதாக பதற்றம் நிலவும் சூழலில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியானதைத் தொடர்ந்து, அவரது நடவடிக்கைகள் தொடர்பில் பல நாடுகள் பதற்றமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக வரி விதிப்புகளில் மாற்றம் கொண்டுவரப்பட்ட வர்த்தகப் போருக்கு வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது.
இத்தகைய சூழலில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) பாரிஸில் சந்தித்துள்ளார்.
Champs Elyseesயில் உள்ள ஜார்ஜஸ் கிளெமென்சோவின் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 1944ஆம் ஆண்டு சர்ச்சிலுக்குப் பிறகு, பிரான்சில் போர் நிறுத்த தின நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் முதல் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் ஆவார்.
தலைவர்கள் இருவரும், உக்ரைனின் நிலைமையை விவாதிப்பதன் மூலம் பேச்சுவார்த்தையை தொடங்கினர். குளிர்காலத்தில் உக்ரைனை வலிமையான நிலையில் வைப்பதாக இருவரும் உறுதியளித்துள்ளனர்.
மத்திய கிழக்கு குறித்த பேச்சுவார்த்தையின்போது, காஸா மற்றும் லெபனான் நிலைமையில் ஆழ்ந்த கவலையை தலைவர்கள் குறிப்பிட்டனர். அத்துடன் மேற்குக் கரையில் ஸ்திரத்தன்மை தேவை என வலியுறுத்தினர்.