சீனாவில் மைதானம் ஒன்றுக்குள் நுழைந்த கார் : 35 பேர் உயிரிழப்பு!

#SriLanka #China
Dhushanthini K
1 day ago
சீனாவில் மைதானம் ஒன்றுக்குள் நுழைந்த கார் : 35 பேர் உயிரிழப்பு!

சீனாவின் ஷுஹாய் நகரில் உள்ள மைதானம் ஒன்றின் முன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மக்கள் மீது கார் ஒன்று அதிவேகமாக சென்றதால் அங்கிருந்த ஏராளமானோர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

 உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சந்தேகநபரை விவாகரத்து செய்ததன் பின்னர் ஏற்பட்ட சொத்து தீர்வின் போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான மன அழுத்தம் காரணமாகவே இந்த நபர் இவ்வாறு செய்துள்ளதாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

 சந்தேக நபர் தற்போது கோமா நிலையில் உள்ளதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதனால் அவரை விசாரிக்க கூட முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!