கிரிப்டோகரன்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய டிரம்பின் வெற்றி

#America #President #Trump #Crypto
Prasu
1 week ago
கிரிப்டோகரன்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய டிரம்பின் வெற்றி

உலக வல்லரசான அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள அதிபர் தேர்தல் பிட்காயின் மதிப்பை எகிறச்செய்துள்ளது. 

டிரம்பின் வெற்றி கிரிப்டோகரன்சியில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கிரிப்டோவின் முன்னணி காயினான பிட்காயின் மதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

அமெரிக்க டாலர் மதிப்பில் 88,817 டாலர்களை எட்டி கிரிப்டோ சந்தையில் முதல் இடத்தில் உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75.62 லட்சம் ஆகும். 1,00,000 டாலரை நெருங்கிக்கொண்டிருக்கும் பிட்காயின் மதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

கிரிப்டோகரன்சியை ஆதரிக்கப்போவதாகத் தனது பிரசாரத்தில் டிரம்ப் சொன்னதே பிட்காயின் வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

 தற்போதைய நிலவரப்படி பிட்காயின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 1.75 டிரில்லியன் ஆக உள்ளது. எனவே வெள்ளியின் சந்தை மதிப்பான 1.729 டிரில்லியன் டாலரை தற்போது பிட்காயின் சந்தை மதிப்பு ஓவர்டேக் செய்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!