இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த சவுதி அரேபியா இளவரசர்

#Israel #Warning #SaudiArabia
Prasu
1 week ago
இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த சவுதி அரேபியா இளவரசர்

பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. 

இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் இஸ்ரேலுக்கு சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார். சவுதியின் ரியாத்தில் அரபு நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நடந்தது. 

இதில் முகமது பின் சல்மான் பேசியதாவது:- காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை என்பது இனப்படுகொலை செய்யும் வகையில் உள்ளது. பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக செயல்பட விடாத வரை சவுதி அரேபியா, இஸ்ரேலை ஒரு போதும் அங்கீகரிக்காது.

உடனே இப்போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும். அதேபோல் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலையும் கண்டிக்கிறோம்.இதுதவிர இஸ்ரேல் ஈரானை குறிவைக்கிறது. 

இதை தடுத்து ஈரானின் இறையாண்மையை நிலைநாட்ட சர்வதேச அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும். பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் உள்ள நமது சகோதரர்களுக்கு எதிரான இஸ்ரேலிய நடவடிக்கைகளை தடுக்க சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையே வடக்கு இஸ்ரேலின் ஹைபா நகரை குறிவைத்து லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். சுமார் 150க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டன. 

இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆனாலும், சில ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் விழுந்து வெடித்தது. இதில் ஒரு குழந்தை உள்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!