கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துக்களால் ஐவர் உயிரிழப்பு!

#SriLanka #Accident
Thamilini
1 year ago
கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துக்களால் ஐவர் உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சாலை விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

 பிடிகல, மொரகஹஹேன, ஹிக்கடுவ, பதுரலிய மற்றும் கட்டுபொட ஆகிய பிரதேசங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 நேற்று (12) அதிகாலை பிடிகல-பிட்டிகல எல்பிட்டிய வீதியில் அமுகொட பிரதேசத்தில் பிடிகலவிலிருந்து எல்பிட்டிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியின் பின்பகுதியில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

 துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை நேற்று காலை கொழும்பு – ஹொரண வீதி மொரகஹஹேன கோணபால பகுதியில் ஹொரணையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று பக்கவாட்டு வீதியில் திரும்ப முற்பட்ட போது முன்னால் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

 இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி, பின் இருக்கையில் பயணித்த பெண் மற்றும் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார். 

 உயிரிழந்தவர் 34 வயதுடைய மித்தெனிய, குடகலறை பிரதேசத்தை சேர்ந்தவராவார். காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 மேலும் நேற்று பிற்பகல் ஹிக்கடுவை, காலி - கொழும்பு வீதியில் தொடந்துவ பிரதேசத்தில் ஹிக்கடுவையிலிருந்து காலி நோக்கி பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.  விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும், நேற்று மாலை, பதுரலிய - மத்துகம கெலிங்கந்த வீதியின் கொஸ்குலன பிரதேசத்தில், மத்துகமவிலிருந்து கெலிங்கந்த நோக்கிச் சென்ற லங்காம பஸ்ஸொன்று, முன்னால் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

 விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து புலத்சிங்கள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 35 வயதுடைய கொஸ்குலான மொல்காவ பிரதேசத்தில் வசித்து வந்தவர். விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

 நேற்றிரவு, கட்டுபொத, கடஹபொல-ரம்பவெவ வீதியில் கட்டுமுலுவ பிரதேசத்தில் ரம்பாவெவயிலிருந்து கட்டுபொத நோக்கிச் சென்ற வான் ஒன்றுடன் பாதசாரி ஒருவர் மோதியுள்ளார். கஹவிட்டிய, பண்டாரகொஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4